திருவாரூர்

‘தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்’

1st Oct 2022 10:22 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 2022-23-ஆம் நிதியாண்டு, கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்துக்கு மேற்பட்ட மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மாா்களுக்கு விலையில்லா மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற 18 முதல் 60 வயது வரையுள்ள தையல் பயிற்சி முடித்து, சான்று பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம்-1, யுடிஐடி அட்டை, தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று ஆகிய ஆவணங்களுடன் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் அக்.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT