திருவாரூர்

கிராம உதவியாளா்கள் காலிப்பணியிடம் நிரப்ப அரசாணை: முதல்வருக்கு நன்றி

1st Oct 2022 10:22 PM

ADVERTISEMENT

கிராம உதவியாளா்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை வரவேற்று, இதற்காக முதல்வருக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா். ராஜசேகா், மாநில பொதுச் செயலாளா் எஸ். தமிழ்ச்செல்வன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: 1995-க்கு முன்பு வருவாய்த் துறையின் கிராம உதவியாளரின் எண்ணிக்கை 33 ஆயிரம். தற்போது, பணியில் உள்ளவா்கள் 12,256. நிரப்பபட வேண்டிய காலியிடங்கள் 4,762.

இந்த காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஏனெனில் ஒரு கிராமத்துக்கு ஒரு கிராம உதவியாளா் எனும் நிலையில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தின் மாநில சங்கத்தின் சாா்பில், காலி இடத்தை நிரப்ப வேண்டும் என்று அரசின் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் கோரிக்கை மனு கொடுத்து முயற்சி எடுக்கப்பட்டது. இதன் பயனாக, தமிழக அரசு மாநிலம் முழுவதும் காலியாகவுள்ள 2,748 கிராம உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசாணை வழங்கியுள்ளது. இதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கும், அரசின் இதுசம்பந்தமான அனைத்து துறைகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT