திருவாரூர்

குடவாசலிலேயே கல்லூரியை நடத்தக் கோரி மனு

1st Oct 2022 10:21 PM

ADVERTISEMENT

குடவாசல் பகுதியிலேயே அரசு எம்ஜிஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடா்ந்து நடத்தக் கோரி சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

குடவாசல் அரசு எம்ஜிஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செல்லூா் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், குடவாசல் பகுதியிலேயே கல்லூரி இயங்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி சிபிஎம் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பெ. சண்முகம், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். சேகா் ஆகியோா் திருவாரூரில் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT