திருவாரூர்

திருவோணமங்கலம் ஞானபுரி ஆஞ்சநேயா் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

1st Oct 2022 10:17 PM

ADVERTISEMENT

திருவோணமங்கலம் ஞானபுரி விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது.

நீடாமங்கலம் அருகே திருவோணமங்கலம் ஞானபுரியில் சித்திரகூட சேத்திரம் ஸ்ரீசங்கட ஹர மங்கல மாருதி ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயா் சுவாமி அருள்பாலித்து வருகிறாா். ஆஞ்சநேயா் சுவாமிக்கு வலதுபுறத்தில் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரும், இடதுபுறத்தில் ஸ்ரீகோதண்டராமா் சுவாமியும் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனா்.

சிறப்பு பெற்ற இக்கோயிலில் புரட்டாசி மாத 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு விஸ்வரூப ஆஞ்சநேயா் சுவாமிக்கு மஞ்சள், பால், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சுவாமிக்கு மஞ்சள் பட்டாடை உடுத்தி, துளசி, மலா் மாலைகளால் அலங்கரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீஜகத்குரு பத்ரி சங்கராச்சாரிய ஸ்மஸ்தானம் ஸ்ரீசேக்ஷத்திர சங்கடபுர ஸ்ரீவித்யாவிடம் ஸ்ரீஞானகுரு சித்திரகூட சேத்திர திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரா் மற்றும் கோயில் ஸ்தாபகா் ரமணி அண்ணா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT