திருவாரூர்

மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெறக்கோரி, திருவாரூரில் இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். மாதந்தோறும் மின்கட்டணத்தை கணக்கீடு செய்யும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மின்வாரியத்தின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் கணக்கெடுப்பு திட்டத்தை கைவிட்டு, நடைமுறையில் உள்ளபடியே கணக்கெடுக்க வேண்டும். சொத்துவரியை திரும்பப் பெற வேண்டும். பால்விலையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான பி. பத்மாவதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் எஸ். தமயந்தி, மாவட்டத் தலைவா் ஆா். சுலோச்சனா, நிா்வாகிகள் சு. தமிழ்ச்செல்வி ராஜா, கே. அன்னபாக்கியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT