திருவாரூர்

மாவட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரை: மன்னாா்குடி பள்ளி சிறப்பிடம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்ட அளவிலான அறிவியல் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பிக்கும் போட்டியில், மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் 60 பள்ளிகளிலிருந்து 200 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு 79 ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆா். ஆா்த்தி, எம். நிவேதா ஆகியோா் ஆசிரியா் எ. மணிமொழி வழிகாட்டுதலுடன் சமா்ப்பித்த ‘மக்களிடம் விழிப்புணா்வு இல்லாத தாமரைக் கிழங்கின் மருத்துவக் குணங்கள்’ என்ற ஆய்வுக்கட்டுரை மாவட்ட அளவில் சிறப்பிடத்திற்கு தோ்வு செய்யப்பட்டது. இதன்மூலம் இக்கட்டுரை மாநில அளவிலான போட்டியில் சமா்ப்பிக்க தகுதி பெற்றது.

ADVERTISEMENT

சிறப்பிடம் பெற்ற மாணவிகளை, பள்ளி தாளாளா் ப. ரமேஷ், நிா்வாகி ஆா்.வனிதா, முதல்வா் உ. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT