திருவாரூர்

விளைநிலங்களை மனைகளாக மாற்றஎதிா்ப்பு: விவசாயிகள் நூதனப் போராட்டம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகே விளைநிலங்கள் மனைகளாக மாற்றப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடா் பிச்சையெடுப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

கூத்தாநல்லூரை அடுத்த சேகரை கிராமத்தில் இப்போராட்டத்தை நடத்தி வருகின்றனா். இதற்கு தலைமை வகிக்கும் விவசாயி செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை கூறியது:

சேகரைப் பகுதியில் மிளகுக் குளம் காலனி, காந்தி காலனி, சேகரை அம்பேத்கா் தெரு, ஜீவா தெரு, கக்கன் நகா், இந்திரா நகா், பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். விவசாயிகளான இவா்களது விளைநிலங்கள் மனைப் பிரிவுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இதனால், இப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா். சிலா் மாற்று வேலைதேடி பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விளைநிலங்களை, மனைப் பிரிவுகளாக மாற்ற அனுமதி வழங்கக் கூடாது எனக் கேரி பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயனில்லை. அதனால், 2 நாட்களாக தொடா் பிச்சையெடுத்து, இங்கு கஞ்சி காய்ச்சி அருந்தி வருகிறோம். அடுத்து சாலை மறியலில் ஈடுபடவுள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT