திருவாரூர்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டி

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கூத்தாநல்லூா்: கொரடாச்சேரி வட்டார வள மையம் சாா்பில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டிக்கு, தலைமையாசிரியா் ஷொ்பின் அருள் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் கி. சுமதி முன்னிலை வகித்தாா். மேற்பாா்வையாளா் இரா. பிருந்தாதேவி வரவேற்றாா்.

போட்டிகளை, வட்டாரக் கல்வி அலுவலா் வீ. விமலா தொடங்கி வைத்தாா். இதில் 30 மாணவா்கள் பங்கேற்றனா். போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு அனைவருக்கும், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், ஆசிரியா் பயிற்றுநா்கள் சரவணன், இரா.ரேவதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சிறப்பாசிரியா்கள் ஜான்சி, மதுமதி, மேரி ஜெயசீலி, பாபு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT