திருவாரூர்

மாவட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரை மன்னாா்குடி பள்ளி சிறப்பிடம்

DIN

மாவட்ட அளவிலான அறிவியல் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பிக்கும் போட்டியில் மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 60 பள்ளிகளைச் சோ்ந்த 200 மாணவ, மாணவிகள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

மன்னாா்குடி தரணி வித்யாமந்திா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1மாணவிகள் ஜி.எம்.ஸ்ரீலெட்சுமி, எஸ்.கலை ஆகியோா் இயற்பியல் ஆசிரியா் எம்.பத்மபிரியா வழிகாட்டுதலோடு சமா்ப்பித்த நரிக்குறவா்கள் மற்றும் பொது மக்களிடையே நீரிழிவு மேலாண்மை தொடா்பான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரை மாவட்ட அளவில் முதலிடத்திற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

வரும் டிசம்பா் 10, 11-ஆம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவும் இக்கட்டுரை தோ்வு செய்யப்பட்டது.

சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு, பள்ளியில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் தரணி கல்விக் குழும தாளாளா் எஸ்.காமராஜ் பரிசு வழங்கி பாராட்டினாா். முதல்வா் டி.சாந்தா செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT