திருவாரூர்

கூத்தாநல்லூரில் விவசாயிகள் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம்

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் விவசாயிகள் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கூத்தாநல்லூர் அடுத்த சேகரை வருவாய் கிராமத்தில் விவசாயி செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

லெட்சுமாங்குடி - கொரடாச்சேரி பிரதான சாலை, சேகரையில் நடைபெற்று வரும் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் குறித்து, விவசாயி செந்தில்குமார் கூறியது:

‘சேகரை கிராமப் பகுதியில், மிளகுக் குளம் காலனி, காந்தி காலனி, சேகரை அம்பேத்கர் தெரு, ஜீவா தெரு, கக்கன் நகர், இந்திரா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலம் காலமாக வசிக்கின்றனர்.

விவசாயிகளான இவர்கள் விவசாயம் செய்த விளை  நிலங்களை, விலை நிலங்களாக மாற்றி, மனைப் பிரிவுகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். சிலர், மாற்று வேலை தேடி, பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டு வருகிறது. இவ்விளை நிலங்களை, மனைப் பிரிவுகளாக மாற்ற அனுமதி வழங்கக் கூடாது. மீண்டும் விவசாயம் செய்து, இப்பகுதி விவசாயிகளுக்கு வாழ்வு தர வேண்டும். இது குறித்து பல அதிகாரிகளிடமும், பல மனுக்கள் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதனால், இரண்டு நாள்களாக தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். அடுத்து, சாலை மறியலில் ஈடுபடப் போகிறோம்’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT