திருவாரூர்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைக்கும் பணி தொடக்கம்

29th Nov 2022 01:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் மின் வாரிய அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதைத்தொடா்ந்து, பொதுமக்கள் பலரும் கணினி சேவை மையங்களுக்குச் சென்று, ஆதாா் எண்ணை இணைத்து வருகின்றனா். இதைத்தொடா்ந்து, பொதுமக்களுக்கு உதவும் வகையில், மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டா்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை, டிசம்பா் 31 ஆம் தேதி வரை செயல்பட உள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் 36 இடங்களில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு அலுவலகத்திலும் 3 சிறப்புக் கவுன்ட்டா்களும் தொடங்கப்பட்டுள்ளன.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண் இணைக்க, மின் நுகா்வோா் மின்சார அலுவலக சிறப்பு கவுன்ட்டா்களுக்கு ஆதாா் அட்டையைக் கொண்டு சென்றால் போதுமானது. அங்கு எவ்வித கட்டணமுமின்றி இணைத்துக் கொடுக்கப்படுவதாக மின்வாரிய அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT