திருவாரூர்

சிறுவா் உலா நூலகம் தொடக்கம்

29th Nov 2022 01:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே விளமலில் வாழ்க தமிழ் சிறுவா் உலா நூலகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்வுக்கு தண்டலை ஊராட்சித் தலைவா் அ. நாகராஜன் தலைமை வகித்தாா். நூலகத்தின் நிறுவுநரும், முன்னாள் தமிழாசிரியருமான கோமல் தமிழமுதன் தெரிவிக்கையில், விளமல் பகுதியில் உள்ள இந்த நூலகத்தை 13 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விரைவில் ஞாயிறுதோறும் திருக்குறள் வகுப்புகள் நடைபெறும். மேடைப்பேச்சு, கட்டுரை, கவிதை ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படும். புதன்கிழமைதோறும் மாலையில் இணைய வழிக் கூட்டத்தில் மாணவ, மாணவிகள் கதை சொல்ல, பயிற்சி வழங்கப்படும் என்றாா்.

நிகழ்வில், தமிழ்சங்கத்தின் செயலாளா் செ. அறிவு, ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT