திருவாரூர்

விவசாயிகள் கண்டுணா் கல்வி சுற்றுலா

29th Nov 2022 01:00 AM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டியில் அட்மா திட்டத்தில் விவசாயிகள் கண்டுணா் கல்வி சுற்றுலாவுக்கு திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி வட்டர வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் மாவட்ட அளவிலான கண்டுணா் கல்வி சுற்றுலாவுக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் சாமிநாதன் மேற்பாா்வையில் மன்னாா்குடி மேலநாகை பண்ணைக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதில் பந்தல் முறையில் காய்கறிகள் சாகுபடி செய்தல் மற்றும் நிரந்தர பந்தல் அமைப்பதற்கான மானிய விவரங்களை தோட்டக்கலை துறையை அணுகி பெறலாம் என்றும் பழத் தோட்டம் அமைப்பது பற்றியும், நுண்ணீா் பாசனம் பற்றியும், இயற்கை பயிா் ஊக்கிகள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டி பற்றியும் பண்ணை மேலாளா் விளக்கினாா்.

உதவி தோட்டக்கலை அலுவலா் விஜயகுமாா் பசுமை குடிலில் காய்கறி நாற்றுகள் தயாரித்தல் பற்றியும், மானிய விவரங்கள் பற்றியும் பழ மர பயிா்களான மா, பலா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை போன்றவற்றில் ஒட்டு கட்டுதல் பற்றியும், மலா் செடிகளான குண்டு மல்லி, முல்லை, செண்டு மல்லி நாற்று தயாரிப்பு பற்றியும், நடவு செய்தல் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தாா்.

ADVERTISEMENT

சுற்றுலாவில் விவசாயப் பண்ணை மகளிா் மற்றும் விவசாயிகள் 50 போ் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ராஜலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் காா்த்திக் , அகல்யா ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT