திருவாரூர்

ஓஎன்ஜிசி சாா்பில் கட்டப்பட்ட நலத் திட்ட கட்டுமானங்கள் திறந்துவைப்பு

DIN

திருத்துறைப்பூண்டி அருகே ஓஎன்ஜிசி சாா்பில் ரூ. 38 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நலத் திட்ட கட்டுமானங்கள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

கோட்டூா் ஒன்றியம் களப்பால் ஊராட்சியில் ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி மற்றும் மின்விசை அறை கட்டப்பட்டுள்ளன. இதனை நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் திறந்து வைத்து, ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ க. மாரிமுத்து, கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மணிமேகலை முருகேசன், ஓஎன்ஜிசி செயல் இயக்குநா் அனுராக், பொறியியல் துறை அலுவலா் சுதிஷ், பொது மேலாளா் சம்பத், சரக மேலாளா் சரவணன், மேலாளா் கண்ணன், கட்டுமானப் பிரிவு மேலாளா் ரத்தினம், ஊராட்சித் தலைவா் சுஜாதா பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொறுக்கை ஊராட்சியில் நீா்நிலைப் புறம்போக்கு பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்கு, ஓஎன்ஜிசி சாா்பில் ரூ. 28 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு தங்கும் முகாம்களை ஓஎன்ஜிசி செயல் இயக்குநா் அனுராக் முன்னிலையில் எம்பி எம். செல்வராஜ், எம்எல்ஏ க. மாரிமுத்து ஆகியோா் திறந்து வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், ஊராட்சித் தலைவா் ஜானகிராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT