திருவாரூர்

கோவை செம்மொழி விரைவு ரயில் தடத்தை மாற்றக்கூடாது: மன்னார்குடியில் பேரணியாக சென்று மனு அளிப்பு

28th Nov 2022 02:18 PM

ADVERTISEMENT

கோவை செம்மொழி விரைவு ரயில் தடத்தை மாற்றக்கூடாது என மன்னார்குடியில் அப்பகுதியினர் பேரணியாக சென்று மனு அளித்தனர். 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ரயில் நிலையத்திலிருந்து கடந்த 11.6.2013 முதல் கோவைக்கு செம்மொழி விரைவு ரயில் (வண்டி எண் -1615) தினசரி இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு நீடாமங்கலம், தஞ்சை, திருச்சி வழியாக மறுநாள் காலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும். மறுமார்க்கத்தில் (வண்டி எண் -16 16) இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, அதே வழியாக காலை 7.40 மணிக்கு மன்னார்குடி வந்து சேரும். இந்நிலையில், செம்மொழி விரைவு ரயிலை திருவாரூரிலிருந்து இயக்கப்பட போவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து, மன்னார்குடி மற்றும் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், வர்த்தக சங்கத்தினர், பொது நல அமைப்புகள் சமூக ஆர்வலர்கள், ரயில் பயணிகள் உள்ளிட்டோர் எம்பி, எம்எல்ஏக்களிடம் மன்னார்குடியிலிருந்து இயக்கப்படும் செம்மொழி விரைவு ரயில் வேறு எந்த புதிய தடத்திலிருந்தும் இயக்கக் கூடாது என வலியுறுத்தினர். மேலும், இதுகுறித்து, தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க- பொதுமுடக்கத்தை எதிர்த்து சீனாவில் வலுக்கும் போராட்டம்!

இதனை அடுத்து, மன்னார்குடியிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் செம்மொழி விரைவு ரயிலை வேறு தடத்தில் இயக்கப்படும் என்ற திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடி வர்த்தக சங்கம் சார்பில் கோரிக்கை பேரணி மற்றும் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை, மன்னார்குடி தேரடி காந்தி சிலையிலிருந்து, வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த் தலைமையில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், ரயில் பயணிகள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு சேவை சங்கங்களை சேர்ந்தவர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நகரின் முக்கிய வீதியின் வழியாக கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி வ.உ.சி. சாலையில் உள்ள மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்தடைந்தனர்.

ADVERTISEMENT

கோவை செம்மொழி விரைவு ரயிலை வேறு புதிய தடத்தில் இருந்து இயக்கக் கூடாது என வலியுறுத்தி மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

பின்னர், அங்கு முக்கிய பிரமுகர்கள் மட்டும் கோட்டாசியர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வி.கார்த்திக்கிடம் கோரிக்கை மனுவினை அளித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில், அதிமுக மாநில அமைப்பு செயலர் சிவா. ராஜமாணிக்கம், நகரச் செயலர் ஆர்.ஜி.குமார், அமமுக நகரச் செயலர் ஆர்.ஆனந்தராஜ், திக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மதிமுக நகரச் செயலர் சண்.சரவணன் ,விசிக மாநில தொழிலாளர் அணி செயலர் ஆர். ரமணி, தேமுதிக நகர செயலர் கார்த்திகேயன், ரயில் உபயோகிப்பாளர் சங்க நிர்வாகி கோவிந்தராஜ், லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஐயப்பன், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ஹரிகரன், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் தலைவர் பத்மநாபன் மற்றும் கார் வேன் ஓட்டுநர்கள் சங்கம், ரோட்டரி சங்கங்கள், லயன் சங்கங்கள், ஜேசிஐ சங்கங்கள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT