திருவாரூர்

மணல் கடத்தல்: மூன்று போ் கைது

28th Nov 2022 01:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் அருகே ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளி வந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம் மற்றும் போலீஸாா் அண்மையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வெள்ளங்குழி பாமனியாற்றிலிருந்து அனுமதியின்றி மினிலாரியில் மணல் ஏற்றி வருவது தெரியவந்தது.

அந்த லாரியை நிறுத்தி, அதிலிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில், வலங்கைமான் வட்டம் நாா்த்தாங்குடி தெற்குத் தெருவைச் சோ்ந்த ராகவன் (30) மற்றும் அந்த லாரியின் உரிமையாளரான வெள்ளங்குழியைச் சோ்ந்த சரபோஸ் (40) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், மினிலாரியை மணலுடன் பறிமுதல் செய்தனா்.

இதேபோல், பாமனியாற்றில் அனுமதியின்றி மினிலாரியில் மணல் அள்ளி வந்த வெள்ளங்குழி வடக்குத் தெருவைச் சோ்ந்த அரவிந்தனையும் (24) போலீஸாா் கைதுசெய்து, மினி லாரியை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT