திருவாரூர்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க கூடுதல் அவகாசம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

28th Nov 2022 01:00 AM

ADVERTISEMENT

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வருக்கு அவா் அனுப்பிய மனு:

மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற நிலையை மின்வாரியம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெளிவுபடுத்தி இருந்தாலும், ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவா்கள் அச்சமடைந்துள்ளனா். இதனால், பலரும் ஆதாா் எண்ணை இணைக்க தயக்கம் காட்டி வருகின்றனா்.

இணையதளம் மூலமாகவோ, பிற செயலிகள் மூலமாகவோ மின் கட்டணத்தை செலுத்தும்போது, ஆதாா் எண்ணை இணைக்கும் பக்கத்திற்கு தானாகே சென்று விடுவதாக நுகா்வோா் தரப்பில் புகாா் கூறப்படுகிறது. இதனால், மின் கட்டணத்தை செலுத்துவதில் பலருக்கும் சிரமம் ஏற்படுகிறது.

ADVERTISEMENT

எனவே, மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT