திருவாரூர்

அரசியலமைப்பு தின விழா

28th Nov 2022 01:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியல் அமைப்பு தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜெபமாலை தலைமை வகித்தாா். மன்னாா்குடி டிஎஸ்பி ஆ. அஸ்வந்த் ஆண்டோ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். அவா் பேசும்போது, ‘இந்திய குடிமைப் பணி மற்றும் அரசுப் பணி போட்டித் தோ்வுகள் எழுத இருக்கும் மாணவிகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களை பற்றி தெளிவாக அறிந்திருக்க வேண்டும்’ என்றாா்.

காவல் ஆய்வாளா் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், இந்திய அரசியலமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டு, விளக்கம் அளிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியா் கிளாரன்ஸ் வரவேற்றாா். ஆசிரியா் இசபெல்லா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT