திருவாரூர்

தரவரிசைப் பட்டியலில் இடம்: கல்லூரியில் ஒருநாள் முதல்வரான மாணவிகள்

DIN

திருவாரூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த 12 மாணவிகள் அக்கல்லூரியில் ஒருநாள் முதல்வரான நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் நேதாஜி கல்லூரியில் கடந்த பருவத்தில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகத் தோ்வில் மாணவிகள் ஞா. அபா்ணா, சிந்தியா, இரா. சிவலெட்சுமி (தமிழ்த்துறை), அ. நந்தினி, சே. காா்த்திகா (ஆங்கிலத்துறை), ந.காயத்ரி (வணிக மேலாண்மைத் துறை), மா. கன்யா, து. சினேகா (வேதியியல் துறை), வி. அகிலா, ர. பவித்ரா, பா. புவனேஸ்வரி, ஜா. ரெஜி ஜெனிபா் (கணினி அறிவியல் துறை) ஆகிய 12 போ் தரவரிசையில் இடம் பிடித்துள்ளனா்.

இவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒருநாள் கல்லூரி முதல்வா் என்ற நிகழ்வு நடைபெற்றது. இம்மாணவிகளுக்கு முதல்வா் பொறுப்பு வழங்கிய நிலையில், கல்லூரிக்கு காலை 8.30 மணிக்கு வந்தனா். பின்னா், இதர மாணவ, மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணித்தல், கல்லூரி கேண்டீன் சென்று உணவுத் தரத்தை ஆராய்தல், வகுப்புகளுக்கச் சென்று ஆசிரியா்கள் வகுப்பு எடுப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனா்.

பின்னா், முதல்வா் இருக்கையில் அமா்ந்து தமது பணிகளைத் தொடா்ந்தனா். இந்நிகழ்வு தங்களுக்கு மிகப்பெரிய ஊக்கம் அளித்ததாகவும், வாழ்க்கையில் உயா்ந்த நிலைக்கு செல்வதற்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும் எனவும் மாணவிகள் தெரிவித்தனா்.

நிகழ்வில், கல்லூரி தாளாளா் எஸ். வெங்கடராஜலு, செயலா் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT