திருவாரூர்

ரயில் மறியல்: போராட்டக் குழுவினருடன் அரசு தரப்பு பேச்சுவாா்த்தை

27th Nov 2022 12:38 AM

ADVERTISEMENT

 

திருவாரூரில் தெற்கு ரயில்வேயை கண்டித்து திங்கள்கிழமை நடைபெறும் ரயில் மறியல் தொடா்பாக போராட்டக் குழுவினருடன் அரசு அலுவலா்கள் திங்கள்கிழமை சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

டெல்டா பகுதிகளுக்கு தேவையான அளவில் ரயில்கள் இயக்கப்படாததைக் கண்டித்து திருவாரூா், நாகை மாவட்டங்களில் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் பங்கேற்க உள்ளனா்.

இந்நிலையில், இந்த போராட்டம் குறித்த சமாதானப் பேச்சுவாா்த்தை, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன், நாகை மாலி, க. மாரிமுத்து உள்ளிட்டோரும், ரயில்வே அதிகாரிகளும் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, போராட்டக் குழுவினரின் கோரிக்கைகள் அனைத்தும் ரயில்வே துறை உயா் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் திட்டமிட்டபடி நவம்பா் 28-இல் தொடா் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT