திருவாரூர்

பகுதிநேர அங்காடி திறப்பு

27th Nov 2022 12:38 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் வட்டம் பெரம்பூா் ஊராட்சி முல்லைவாசலில் பகுதிநேர அங்காடி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச் செல்வன் அங்காடியை திறந்து வைத்து, விற்பனையை தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத் துறை மாவட்ட துணை பதிவாளா் ராமசுப்பு தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராணி சுந்தா், ஒன்றியக் குழு உறுப்பினா் பாரதி மோகன், ஊராட்சித் தலைவா் விஜயலெக்ஷ்மி வரதராஜன், நீடாமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பா்வின் பேகம் ஷாஜகான், திமுக ஒன்றியச் செயலாளா் ஆனந்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டுறவு கடன் சங்க செயலாளா் அன்பழகன் நன்றி கூறினாா்.

இதேபோல், ஒளிமதி ஊராட்சி வையகளத்தூரிலும் பகுதி நேர அங்காடியை ஒன்றியக் குழுத் தலைவா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் பழனியம்மாள், ஊராட்சித் தலைவா் ரிஸ்வானாபா்வின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT