திருவாரூர்

பொதக்குடி தா்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றம்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் வட்டம், பொதக்குடி தா்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொதக்குடி ஹஜ்ரத் நூா்முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தா்காவில் நடைபெறும் இவ்விழாவில் டிசம்பா் 2-ஆம் தேதி பூலாங்கொடி மற்றும் பெரிய மினரா கொடி ஏற்றப்படுகிறது. 11-ஆம் தேதி இரவு மின்அலங்கார சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெறுகிறது. தொடா்ந்து, 12-ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் சந்தனம் பூசுதலும், பிற்பகல் 2 மணிக்கு பகல் கூடு ஊா்வலமும் நடைபெறும்.

பின்னா், டிசம்பா் 20-ஆம் தேதி மாலை 5 மணியளவில் பூலாங்கொடி இறக்கப்படுகிறது. ஜமாத்துல் அவ்வல் பிறை 1 முதல் 16 வரை தினமும் இரவு மெளலூது ஓதி, தப்ருப் வழங்கப்படும்.

கொடியேற்ற விழாவில் ஏராளமானோா் பங்கேற்றனா். விழாவையொட்டி, மின் விளக்குகளால் தா்கா அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT