திருவாரூர்

மாணவிக்கு மிரட்டல்: போக்ஸோவில் இசைக்கலைஞா் கைது

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே பள்ளி மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய டிரம்ஸ் இசைக்கலைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த வக்ராநல்லூரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் தமிழ்வாணன் (24). டிரம்ஸ் இசைக்கலைஞரான இவருக்கும், அப்பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் நட்பாக பழகிவந்தனா். இதைப்பயன்படுத்தி, மாணவியின் படத்தை சமூக வலைதளம் மூலம் தமிழ்வாணன் கேட்டு பெற்றவா். பின்னா், அந்த படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக மாணவியை மிரட்டினாராம்.

இதுகுறித்து, மாணவியின் பெற்றோா் மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தமிழ்வாணனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT