திருவாரூர்

குடவாசலில் நவ.29-இல் மின்தடை

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

குடவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.29) மின் விநியோகம் இருக்காது என துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு நவ.29-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT