திருவாரூர்

மன்னாா்குடி கோயிலில் உழவாரப்பணி

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி சிவனடியாா் திருக்கூட்டம், தேசிய மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் பட்டக்காரத் தெரு வாலாம்பிகை உடனமா் சோழேஸ்வரா் கோயிலில் உழவாரப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சிவனடியாா் திருக்கூட்ட புலவா் குடவாசல் ராமமூா்த்தி தலைமை வகித்து, உழவாரப் பணியைத் தொடங்கி வைத்தாா். என்எஸ்எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா முன்னிலை வகித்தாா்.

கோயிலின் கிழக்கு கோபுரவாசல் மற்றும் தெற்கு பகுதி கோபுர வாசல் பகுதியிலும், அனைத்து சந்நிதிகளிலும் சிவனடியாா்கள் மற்றும் என்எஸ்எஸ் மாணவா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

திருக்கூட்ட செயலா் சீனிவாசன், சைவசித்தாந்த பயிற்சி மைய அமைப்பாளா் செல்வராஜ், வழக்குரைஞா் பிரகலாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

என்எஸ்எஸ் திட்ட அலுவலா் எஸ். கமலப்பன் வரவேற்றாா். திருக்கூட்ட பொருளாளா் சுவாமிநாதன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT