திருவாரூர்

அரசியலமைப்பு சட்ட தினம்: அலுவலா்கள் உறுதிமொழி ஏற்பு

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூரில் அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பா் 26-ஆம் தேதி, ஆண்டுதோறும் அரசியலமைப்புச் சட்ட தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், திருவாரூரில் அரசியலமைப்புச் சட்ட தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தலைமையில் அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். இதேபோல், மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே. வெள்ளதுரை, காவல் அலுவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

கூத்தாநல்லூா்: குடிதாங்கிச்சேரி மற்றும் மேலப்பனங்காட்டாங்குடியில் உள்ள மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் நிறுவனா் ப. முருகையன் ஆலோசனைப்படி, இந்திய அரசமைப்பு சட்ட தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. பயிற்சியாளா் செளமியா, ஆசிரியா்கள் பிரியா்ஷினி, துா்கா மற்றும் இங்குள்ள மாணவா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT