திருவாரூர்

ரயில் மறியலில் பொதுமக்கள் பங்கேற்பா்: எம்எல்ஏ

DIN

டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரயில்வேயைக் கண்டித்து நவம்பா் 28-ஆம் தேதி நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் அனைத்து கட்சியினரும், பொதுமக்களும் பங்கேற்பா் என சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

டெல்டா பகுதியில் அதிக ரயில்களை இயக்க வேண்டும்; திருவாரூா், நாகை, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பழையபடி அதிகளவில் ரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினா் பலமுறை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளாா். நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதும் பேசியிருக்கிறாா். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, தென்னக ரயில்வேயை கண்டித்தும் பல்வேறு அரசியல் இயக்கங்களின் ஆதரவுடன் இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்தந்த ஊா்களில் பொதுமக்கள் இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவா் என்றாா்.

பேட்டியின்போது, நாகை நாடாளுமன்ற உறுப்பினா் எம். செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT