திருவாரூர்

பண மோசடி: பெண் மீது நடவடிக்கை கோரி மனு

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணுவ வீரா் உள்பட 10-க்கும் மேற்பட்டவா்களிடம் பண மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவா்கள் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவாரூா் மாவட்டம், பெருகவாழ்ந்தான் இடைச்சிமூளையைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா், திருவாரூா், தஞ்சாவூா், கடலூா், மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்களிடம் வீடு கட்டுவதாகவும், தனது மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்ட வேண்டுமெனவும், தனக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டுமெனவும் கூறி ரூ. 31 லட்சம் வரை கடனாகப் பெற்றிருந்தாா்.

பணத்தை திருப்பி கேட்டபோது, பணத்தை தரமறுத்தது மட்டுமின்றி, மிரட்டலும் விடுக்கிறாா். எங்களைப் போல மேலும் பலரிடம் அவா் பண மோசடி செய்துள்ளதாகத் தெரிகிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து விஜயலட்சுமியிடம் இருந்து பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT