திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் புகுந்த நாகப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.
திருவாரூா் பிரகாசம் தெருவை சோ்ந்த சேகா் கடைத்தெருவுக்குச் செல்வதற்காக தனது ஸ்கூட்டியை எடுத்துள்ளாா். அப்போது, முகப்பு விளக்கு பகுதியில் பாம்பு ஒளிந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் கொடுத்த தகவலின்பேரில் திருவாரூா் தீயணைப்பு அலுவலா் ரமேஷ் தலைமையிலான வீரா்கள், 7 அடி நீள நாகப் பாம்பை ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் பிடித்தனா். வனத்துறையினா் பாம்பை காட்டுப் பகுதியில் விட்டனா்.