திருவாரூர்

அரசுப் பள்ளிக்கு 2 தொலைக் காட்சிப் பெட்டிகள்

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

அகரப் பொதக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 2 தொலைக்காட்சிப் பெட்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

2022 - 23-ஆம் ஆண்டிற்கான கலைத் தெருவிழாவின் தொடக்க விழாவுக்கு நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கினாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் ந.சம்பத், ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெனிதா வேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் ரா.ராஜலெட்சுமி வரவேற்றாா்.

மூன்று வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டுதல், பள்ளிக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், வகுப்புகளுக்கு மின் விசிறி வழங்கியவா்கள், யோகா, பரத நாட்டியம், சிலம்ப பயிற்சியாளா்களுக்கு ஊதியம் வழங்குபவா்கல் கௌரவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ஆய்க்குடி ஊராட்சி மன்றத் தலைவா் கெளதம் ஸ்ரீ, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராதிகா, பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் ஜெ.பாலா உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT