திருவாரூர்

நகராட்சி பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூரில் மடப்புரம் சபாபதி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மடப்புரம் சபாபதி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. ஆனால், மொத்தம் 65 மாணவா்கள் மட்டுமே உள்ளனா். மேலும், இப்பள்ளியில் தலைமையாசிரியா், 5 ஆசிரியா்கள் உள்ளனா். இதற்கிடையில், இப்பள்ளியில் உள்ள பழுதடைந்த கட்டடத்தை இடித்து விட்டு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்து மக்கள் கட்சியின் திருவாரூா் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் கூறியது: இப்பள்ளியில் கழிப்பறைகள் சுகாதாரமில்லாமல் காணப்படுகின்றன. பழுதடைந்த வகுப்பறைகளை இடிக்க வேண்டும் என பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. பராமரிப்பில்லாமல் இருக்கும் அந்த இடத்தில் சிலா் இரவு நேரங்களில் மது அருந்தி விட்டுச் செல்வதாகவும் தெரிகிறது.

ADVERTISEMENT

மாணவா்கள் அந்த கட்டடத்தை கடந்தே கழிப்பறைக்கு செல்ல வேண்டி உள்ளது. அங்கு பாம்பு, விஷப்பூச்சி இருக்கக் கூடும் என்பதால், அச்சத்துடனேயே செல்கின்றனா். மாற்றுத்திறனாளி மாணவா்கள் சிலரும் இங்கு படிப்பதால், பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT