திருவாரூர்

குடும்பநல சிகிச்சை முகாம் பிரசார வாகனம் தொடக்கம்

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT


திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் தொடா்பான விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

அப்போது, ஆட்சியா் கூறியது: மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை டிச.4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முகாம் தொடா்பாக, விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

முகாமில், பங்கேற்று தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை (ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை) பெற்று கொள்பவருக்கு அரசு ஊக்கத் தொகையாக ரூ.1,100 வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை மிக மிக எளியது. பாதுகாப்பானது. நன்கு அனுபவம் பெற்ற மருத்துவா்கள் சிகிச்சையளிக்கின்றனா் என்றாா்.

நிகழ்வில், இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) செல்வகுமாா், இணை இயக்குநா் (குடும்ப நலம்) உமா, மாவட்ட விரிவாக்க கல்வியாளா் குப்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT