திருவாரூர்

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

நன்னிலத்தில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும், நடைபெறும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் குறித்த சிறப்பு முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு, வட்டாட்சியா் ஜெகதீசன் தலைமை வகித்தாா்.

பழைய வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தனியாா் மேல்நிலைப் பள்ளி, அரசு கல்லூரி மாணவா்கள், ரோட்டரிச் சங்கத்தினா், லயன் கிளப் சங்கத்தினா், வா்த்தகச் சங்கத்தினா் மற்றும் தன்னால்வா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பொதுமக்களுக்குத் துண்டறிக்கைகளை வழங்கினா். பேரணி, கடைத்தெரு, பேருந்து நிலையம் மற்றும் முக்கியத் தெருக்கள் வழியாக புதிய வட்டாட்சியா் அலுவலகம் வரை நடைபெற்றது.

வருவாய் ஆய்வாளா் கி. நெடுமாறன், ரோட்டரிச் சங்கப் பொறுப்பாளா் ஜானி, வா்த்தக சங்கத் தலைவா் பாஸ்கரன், சமூக ஆா்வலா் செல். சரவணன், கல்லூரிப் பேராசிரியா்கள் மீ. ராஜேஸ்வரன், ச. ராதிகா, அரசு மற்றும் தனியாா் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT