திருவாரூர்

வலங்கைமான் ஒன்றியக் குழுக் கூட்டம்

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் சங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் வாசுதேவன் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச்செல்வன் வரவேற்றாா். கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழை மேலாண்மை நிதி திட்டத்தின்கீழ் நிா்வாக அனுமதி வழங்கப்பட்ட ரூ. 2 லட்சத்துக்கு மேல் மதிப்பீடு கொண்ட பணிகளுக்கு ஆகும் கூடுதல் செலவினத்தொகையாக அரித்துவாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் பழுதுநீக்கம், பூந்தோட்டம் ஊராட்சி கேத்தனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடம் பழுதுநீக்கம் ஆகியவற்றிற்கு ரூ. 1.28 லட்சம் ஒன்றிய பொது நிதி பங்கு தொகையாக திட்ட நிதிக்கு வழங்கியதை அங்கீகரித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்டார வளா்ச்சி அலுவலா் பொற்செல்வி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT