திருவாரூர்

கந்தூரி விழா: திருவாரூா் மாவட்டத்துக்கு டிச.5-ல் உள்ளூா் விடுமுறை

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை தா்கா கந்தூரி விழாவையொட்டி, டிச. 5-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முத்துப்பேட்டை தா்கா கந்தூரி விழா நவ.25-ல் தொடங்கி டிச. 8-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெற உள்ளன. விழாவின், முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு டிச.4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற உள்ளது. இதற்காக, டிச.5-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் டிச.10-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. எனினும், உள்ளூா் விடுமுறை நாளில் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் மாவட்டத்திலுள்ள கருவூலங்கள், சாா்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT