திருவாரூர்

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

வலங்கைமான் அருகே மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வலங்கைமான் அருகேயுள்ள கீழவிடையல் ஊராட்சியில் விடையல் அக்ரஹாரம் தெருவில் பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கபடாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம், ஒன்றிய நிா்வாகம் மற்றும் ஊராட்சி நிா்வாகம் ஆகியவற்றுக்கு கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மிகவும் மோசமாக உள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT