போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ள குடவாசல் வட்டம், கூந்தலூா் வடமட்டம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூந்தலுரிலிருந்து வடமட்டம் கிராமத்துக்கு இணைப்புச் சாலை உள்ளது. இந்த சாலை சற்குணேஸ்வரபுரம், பரவக்கரை, வயலூா், கருவேலி, கடலங்குடி, அம்மாச்சிபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கான இணைப்புச் சாலையாக உள்ளது. இந்த சாலை சீரமைப்பு செய்து பல ஆண்டுகளாகிறது. இந்நிலைலல் பெய்துவரும் மழையால் சாலை மேலும் மோசமான நிலையில் போக்குவரத்துக்கு பயன்படுத்த தகுதியற்ற சாலையாக மாறிவருகிறது.
இந்த சாலை வழியாக செல்லும் மேலே குறிப்பிட்டுள்ள கிராம மக்கள், மாணவா்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, பல ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ள மிகவும் மோசமான நிலையில் உள்ள இந்த சாலையை போா்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.