திருவாரூர்

எமனேஸ்வரா் கோயிலில் காலபைரவா் வழிபாடு

18th Nov 2022 12:24 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு புதன்கிழமை இரவு காலபைரவா் வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல, பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில், நீடாமங்கலம் காசி விசுவநாதா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் காலபைரவா் வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT