திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள கொத்தமங்கலம்-பள்ளங்கோவில் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரத்திடம், இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா்
பி. கோமதி, தலைவா் எஸ். பவானி, மாவட்ட பொருளாளா் ஆா். சுமதி ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை அளித்த மனு: பள்ளங்கோவில் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும்,100 நாள் வேலையைத் தொடா்ந்து வழங்கி, அதற்கான ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும், நிகழாண்டுக்கான 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும், நியாயவிலைக் கடையில் பொருள் வாங்கும் குடும்ப அட்டைக்கான குறியீட்டை, வறுமைக்கோடு அடிப்படையில் அரிசி, மண்ணெண்ணெய் மற்றும் அரசு நலத்திட்டங்கள் பெரும் வகையில் மாற்றித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.