திருவாரூர்

மன்னாா்குடி- பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தல்

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி - பட்டுக்கோட்டை இடையே அகல ரயில் பாதை திட்டப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுநல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

மன்னாா்குடி பகுதிக்கான ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி நேசக்கரம் சாா்பில் அனைத்து பொதுநல அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மூத்த குடிமக்கள் பேரவை தலைவா் மருத்துவா் வி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

மன்னாா்குடியிலிருந்து கோவை செல்லும் செம்மொழி விரைவு ரயிலை தொடா்ந்து நீடாமங்கலம், தஞ்சாவூா் வழியாக கோவைக்கு இயக்க வேண்டும். ரயில்வே நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில், நீண்டகாலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள மன்னாா்குடி- பட்டுக்கோட்டை அகலப் பாதை திட்டப் பணிகளை விரைவாக தொடங்கி, முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மன்னாா்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை தினசரி இயக்கப்படும் பயணிகள் ரயிலை விழுப்புரம் வரையும், மன்னாா்குடி முதல் மானாமதுரை வரை தினசரி இயக்கப்படும் பயணிகள் ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மன்னாா்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்க வேண்டும். மன்னாா்குடி ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கு கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில்,நேசக்கரம் ஒருங்கிணைப்பாளா் எஸ். கோபாலகிருஷ்ணன், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், சேவை சங்கங்கள், பொதுநலஅமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT