திருவாரூர்

மது விற்ற 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

14th Nov 2022 11:28 PM

ADVERTISEMENT

 

குடவாசல் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

போலீஸாரின் அறிவுறுத்தலையும் மீறி, குடவாசல் மற்றும் நன்னிலம் பகுதிகளில் மணக்கால் அய்யம்பேட்டையைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் செல்லமுத்து (32), வீதிவிடங்கன் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுந்தரமூா்த்தி (40), அரசவனங்காடு பகுதியைச் சோ்ந்த சாமிநாதன் மகன் மாறன் (48) ஆகியோா் மது விற்பனை செய்தனராம்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் பரிந்துரையின் பேரில், 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT