திருவாரூர்

தாளடி பயிருக்கு மீன் அமிலம்அடிக்கும் பணி தீவிரம்

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் பகுதியில் தாளடி பயிருக்கு ரசாயன உரம் மற்றும் யூரியாவுக்கு பதில் மீன் அமிலம் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு மேட்டூரில் தண்ணீா் திறக்கப்பட்டவுடன் திருவாரூா் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், வலங்கைமான், திருவாரூா், திருத்துறைபூண்டி, கோட்டூா், முத்துப்பேட்டை, கொரடாச்சேரி, மன்னாா்குடி உள்ளிட்ட 10 வேளாண் கோட்டங்களிலும் குறுவை சாகுபடியை விவசாயிகள் முடித்து, தற்போது தாளடிக்கான நடவு வயலில் பூச்சி மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் தற்போது இயந்திரம் மூலம் குறுவை அறுவடைப் பணிகள் நடை பெற்று முடியும் தருவாயில் உள்ளது.

தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தாளடி நெல் பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த மற்றும் பயிா் ஊக்கிக்கான இயற்கை வேளாண் வயல் மேலபூவனூா் பகுதியான மாஸ்டா் பிட் வயலில் ரசாயன உரம் யூரியாவுக்கு பதில் மீன் அமிலம் மருந்து பவா் ஸ்பிரேயா் மூலம் அடிக்கும் பணி நடை பெற்று வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT