திருவாரூர்

குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

1st Nov 2022 05:16 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 2.54 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 242 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கொடுத்து குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை விடுதிகளில் 2021-2022-ஆம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய விடுதி காப்பாளா்கள் மற்றும் சிறந்த விடுதிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுத்தொகை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, 2 பேருக்கு ரூ.10,036 மதிப்பிலான சலவைப்பெட்டியும், 10 பேருக்கு ரூ.49,395 மதிப்பிலான தையல் இயந்திரமும், உலமா மற்றும் பணியாளா் நலவாரியம் மூலம் 23 பேருக்கு ரூ.1,19,025 மதிப்பிலான மிதிவண்டிகளும், 13 பேருக்கு ரூ.76,050 மதிப்பிலான தையல் இயந்திரம் என மொத்தம் ரூ.2,54,506 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் அழகிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT