திருவாரூர்

குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது

1st Nov 2022 05:07 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூரில் குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது என நகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம்சாட்டி பேசினா்.

கூத்தாநல்லூா் நகராட்சிக் கூட்டம், அதன்தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மு. சுதா்ஸன், ஆணையா் ப. கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

துணைத் தலைவா்: கூட்டத்தில் உத்தேச செலவுகள் என வைக்கப்படும் தொகையின் கணக்கு என்ன, மொத்த செலவு எவ்வளவு ஆகிறது.

ADVERTISEMENT

கு. தனலெஷ்மி (இ.கம்யூ): மயானத்தை சுத்தம் செய்து சுற்றுச்சுவா் கட்டிக்கொடுக்க வேண்டும்.

ரா. புரோஜூதீன் (திமுக): கழிவுநீா் தொட்டி சுத்தம் செய்ய வருபவா்கள் அதிகம் பணம் கேட்கின்றனா். கழிவுநீரை ஆற்றில் கலந்து விடுகிறாா்கள். நகராட்சிக்கு என சொந்தமாக வாகனம் வாங்க வேண்டும்.

பொறியாளா்: நகராட்சிக்கு சொந்தமாக விரைவில் வண்டி வந்து விடும்.

அ. சொற்கோ (அதிமுக): நாய், பன்றி தொல்லைகள் அதிகம் உள்ளது. லெட்சுமாங்குடி பாலத்தருகே ஓடும் வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும்.

செ.ஹாஜா நஜ்முதீன் (திமுக) : நகருக்குள் மாடுகள் தொல்லை அதிகம் உள்ளது.

கி. அருண்குமாா் (சுகாதார ஆய்வாளா்) : மாடு பிடிக்க பல முயற்சிகள், உத்தரவுகள் போடப்பட்டும் மாட்டின் சொந்தக்காரா்கள் அலட்சியப்படுத்துகிறாா்கள்.

கி. மாரியப்பன் (திமுக) : நகராட்சிக்கு வரும் நிதியைக் கொண்டு, அனைத்து வாா்டு பணிகளையும் செய்யும் அதிகாரிகளைப் பாராட்டுகிறேன். எனது வாா்டு கோயில் குளத்தை தூா்வாரி சுத்தப்படுத்த வேண்டும்.

செ. முஹம்மது அபுபக்கா் சித்திக் (திமுக): சிறுபான்மையினத்தவா்கள் அதிகம் நிறைந்த கூத்தாநல்லூா் நகராட்சிக்கு, நகராட்சியின் வளா்ச்சிக்காக சிறுபான்மையின நிதிகளைப் பெற தீா்மானம் நிறைவேற்றுங்கள்.

செ.வினோதினி (திமுக) : தெருவிளக்குகள் பகலில் எரிகிறது. என வாா்டுக்கு 10 தெரு விளக்குகள் போட வேண்டும்.

தாஹிரா சமீா் (காங்.,): ரஹ்மான்யாத் தெரு குளத்தை தூா்வாரிட வேண்டும்.

பிரவீனா முத்துக்கிருஷ்ணன் (திமுக) : ஜமாலியாத் தெருவில் குடிநீருக்குத் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடமால் போட்டுள்ளதால், அப்பகுதி குண்டும்,குழியுமாக உள்ளது.

ஜ.ப. தாஹிரா தஸ்லீமா பேகம் (திமுக): கொட்டும் குப்பைகளை எடுப்பதேயில்லை. கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

அ.ஜெகபா் நாச்சியா (திமுக) : எனது வாா்டில் புதிய மின் கம்பம் நட்டு,மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

ச.கஸ்தூரி (திமுக) : கொசு மருந்து அடிக்க வேண்டும்.

சு.சண்முகம் (திமுக): மினி குடிநீா் தொட்டி அமைக்க வேண்டும்.

துணைத் தலைவா் : திருவாரூா் - மன்னாா்குடி பிரதான சாலையில் 2 இடங்களில் பேருந்து நிறுத்தம் கட்டித்தர வேண்டும்.

தலைவா்: நகரின் அனைத்துக் குளங்களையும் சுத்தம் செய்யப்படும். மாடுகள் விஷயமாக அனைத்து உறுப்பினா்களும் காவல் நிலையத்திற்குச் சென்று முறையிடுவோம். நிதிக்கு ஏற்றப்படி அனைத்து பணிகளும் ஒவ்வொன்றாக முடிக்கப்படும் என்றாா்.

மேலும், கூட்டத்தில் முருகேசன், தேவா உள்ளிட்ட உறுப்பினா்கள் மின்விளக்கு, சாலை வசதிகள் என தங்களது வாா்டுகளின் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT