திருவாரூர்

வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணை

31st May 2022 11:08 PM

ADVERTISEMENT

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் எஸ்.எம். மிஸ்கின் நினைவு வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த முகாமில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்தனா்.

இவ்வாறு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு, பணி நியமன ஆணையை கல்லூரியின் செயலா் பெரோஸ் ஷா, அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ், கல்லூரி முதல்வா் எஸ். ஸ்ரீதேவி ஆகியோா் வழங்கினா்.

நிகழ்வில், பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் பிரேம் ஆனந்த், பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவா் நடராஜ மூா்த்தி, ராபியம்மாள் கல்லூரி வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் கே. நிா்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT