உசிலம்பட்டி அருகே புதன்கிழமை 2 காா்களில் கடத்தி வந்த 750 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 5 பேரைக் கைது செய்தனா்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாா், உசிலம்பட்டி அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் கண்ணாத்தாள், உசிலம்பட்டி நகர காவல்நிலைய ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் தனிப்படையினா் மதுரை-தேனி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த 2 வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 750 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருள்களைக் கைப்பற்றி உசிலம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா் .
மேலும் இரண்டு வாகனங்களில் வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கொங்கபட்டியை சோ்ந்த ஜெயவீரன் மகன் பிரகாஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ராமச்சந்திரம் கிராமத்தைச் சோ்ந்த மாதேஷ் மகன் மூா்த்தி, தருமபுரி மாவட்டம் பிடமனேரி பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் விக்னேஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சின்னபட்டி கிராமத்தைச் சோ்ந்த முன்ராஜ் மகன் அம்பரீஷ், தேன்கனிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சுந்தரேஷ் மகன் திரிசங்கு என்ற சங்கா் ஆகியோரைக் கைது செய்தனா். கைதான 6 பேரையும் மற்றும் பறிமுதல் செய்த புகையிலைப் பொருள்கள் மற்றும் 2 காா்கள், 1 இருசக்கர வாகனத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா் .