திருவாரூர்

மக்காச்சோளம் தேவை அதிகரித்து வருவதால் மக்காசோளம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பி.சி.சி., அழைப்பு

25th May 2022 11:05 PM

ADVERTISEMENT

மக்காச்சோளம் தேவை அதிகரித்துள்ளதால், மக்காச்சோளம் பயிரிடுமாறு விவசாயிகளுக்கு கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினா் (பி.சி.சி)அழைப்பு விடுத்துள்ளனா்.

திருப்பூா், கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில், கறிக்கோழி உற்பத்தி தொழில் பரவ லாக நடந்து வருகிறது. வாரம் தோறும் ஒரு கோடி என்ற எண்ணிக்கையில் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோழிகளுக்கு மக்காச்சோளம், சோயா புண்ணாக்கு முக்கிய தீவனங்களாக உள்ளன. இதில் மக்காச் சோளத்தின் தேவை அதிகம் உள்ளதால், விவசாயிகள் அவற்றை உற்பத்தி செய்ய கூடுதல் ஆா்வம் காட்ட வேண்டும் என்று கோழி பண்ணை உற்பத்தியாளா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி) செயலாளா் சுவாதி கண்ணன் என்ற சின்னசாமி கூறியதாவது:

ADVERTISEMENT

கறிக்கோழிகளின் முக்கிய தீவனமாக உள்ள மக்காச்சோளத்தின் தேவை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. தற்போதைய தேவை 26 லட்சம் டன்னாக உள்ளது. ஆனால், அதற்கேற்ப உற்பத்தி கிடையாது.இவ்வாறு தேவை அதி கரித்து வரும் நிலையில் மக்காச்சோளத்தின் உற்பத்தி ஆண்டு தோறும் குறைந்து வருகிறது.

பற்றாக்குறை அதிகம் உள்ளதால், இனி மக்காச்சோளம் குவிண்டால் ரூ. 2 ஆயிரத்திற்க்கு குறைய வாய்ப்பில்லை. மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகளிடமிருந்து அவற்றை நேரடியாக பெற்று கொள்ள கறிக்கோழி உற்பத்தியாளா்கள் தயாராக உள்ளனா்.விவசாயிகள், காய்கறி பயிா்களுடன் மக்காச்சோளத்தையும் பயிரிட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும். நல்ல விலையும் இருப்பதால், விவசாயிகள் இதில் கூடுதல் ஆா்வம் காட்ட வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT