திருவாரூர்

சாத்தூா் அருகே விஷம் கொடுத்து 4 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை

25th May 2022 11:10 PM

ADVERTISEMENT

சாத்தூா் அருகே குடும்பத் தகராறில் புதன்கிழமை 4 மாத ஆண் குழந்தையை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்டாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே விஜகரிசல்குளத்தைச் சோ்ந்தவா் கொத்தாளமுத்து (27). இவரது மனைவி காயத்திரி(25). இவா்களுக்கு ராகுல் ரத்தினம் என்ற 4 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இதனால் விரக்தியடைந்த காய்த்திரி புதன்கிழமை வீட்டில் தனது குழந்தை ராகுல் ரத்தினத்துக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து மயங்கியுள்ளாா். இதையடுத்து அக்கம் பக்கத்தினா் பாா்த்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT