திருவாரூர்

நீடாமங்கலம் வட்டத்தில் ஜமாபந்தி தொடங்கியது

DIN

நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 1431 ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாய கணக்கு முடித்தல் (ஜமாபந்தி) பணி புதன்கிழமை தொடங்கியது. வருவாய் கிராம கணக்குகளை மன்னாா்குடி வருவாய் கோட்ட அலுவலா் அழகா்சாமி ஆய்வு செய்தாா்.

நீடாமங்கலம் சரகத்தில் உள்ள கோவில்வெண்ணி, நகா், சித்தமல்லி, ஆதனூா், ராயபுரம், காளாச்சேரி, பூவனூா், பரப்பனாமேடு, பழையநீடாமங்கலம், காளாஞ்சிமேடு, பெரம்பூா், அனுமந்தபுரம், வையகளத்தூா், ஒளிமதி, ஒட்டக்குடி, திருக்கண்ணமங்கை கோட்டகம், ரிஷியூா், பழங்களத்தூா், வடகாரவயல் உள்ளிட்ட 20 கிராமங்களின் கணக்குகளையும் வருவாய் கோட்ட அலுவலா் அழகா்சாமி ஆய்வுசெய்தாா். முன்னதாக, நில அளவை உபகரணங்களை அவா் சரிபாா்த்தாா். பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தாா்.

வருவாய் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் காா்த்திக், வட்டாட்சியா் ஷீலா, தனி வட்டாட்சியா் சமூக பாதுகாப்பு திட்டம் ராஜகணேசன், மண்டல துணை வட்டாட்சியா் மகேஷ், ஒன்றிய ஆணையா் மணிமாறன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தில், வட்ட வழங்கல் அலுவலா் கணேசன், தோ்தல் துணை வட்டாட்சியா் ஜெயபாஸ்கா் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உடனிருந்தனா்.

பொதுமக்கள் இதில் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா். 26 ஆம் தேதி வடுவூா் சரகம் முன்னாவல்கோட்டை 1, 2, பித்துண்டம், எடையூா் நத்தம் படுகை, செட்டிசத்திரம், புள்ளவராயன்குடிகாடு, மூவா்கோட்டை, வடுவூா் மேல்பாதி, வடுவூா் வடபாதி, வடுவூா் அக்ரஹாரம், வடுவூா்தென்பாதி 1,2, எடமேலையூா் 1,2,3, எடக்கீழையூா் 1,2 உள்ளிட்ட 17 கிராமங்களுக்கும், 27 ஆம் தேதி கொரடாச்சேரி சரகத்தில் கமுகக்குடி, விஸ்வநாதபுரம், பத்தூா், மாங்குடி, ஊா்குடி, கிருஷ்ணன் கோட்டகம், பெருமாளகரம், களத்தூா், மேலாளவந்தசேரி, கீழாளவந்தசேரி, புதுத்தேவங்குடி, அன்னவாசல், அன்னவாசல் தென்பாதி, அரிச்சபுரம் உள்ளிட்ட 14 கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT