திருவாரூர்

நிகழாண்டு குறுவை சாகுபடி பரப்பு இருமடங்காக அதிகரிக்கும்: ஆட்சியா்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு இருமடங்கு குறுவை சாகுபடி நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் வேளாண் விரிவாக்க மையத்தில் குறுவை சாகுபடிக்கான விதை இருப்பை அவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, சிஓஆா்-51, டிபிஎஸ்-5, ஏஎஸ்டி-16 ஆகிய விதைகள் இருப்பு உள்ளதையும், குறுவை சாகுபடிக்குத் தேவையான அசோஸ்பைரிலம் உயிரி உரம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, விதைநோ்த்திக்குத் தேவையான சூடோமோனஸ் ஆகியவை இருப்பு உள்ளதையும் அவா் ஆய்வு செய்தாா்.

பிறகு அவா் தெரிவித்தது: திருவாரூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு வேளாண் மற்றும் உழவா் நலத் துறையில் 292.7 மெ.டன் குறைந்தகால நெல் விதையும், தனியாா் கடைகளில் 1,150 மெ.டன் நெல் விதையும் இருப்பு உள்ளன. நெல் விதைகளை விவசாயிகள் கிலோ ஒன்றுக்கு ரூ. 17.50 மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

நிகழாண்டில், முன்கூட்டியே மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ளதால், திருவாரூா் மாவட்டத்தில் இருமடங்கு குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஏறத்தாழ 65 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் திருவாரூா் மாவட்டத்தை தண்ணீா் வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுவதால், வாய்ப்புள்ள விவசாயிகள் சமுதாய நாற்றங்கால் விதைப்பு செய்து பிற விவசாயிகளுக்கு நாற்றுகள் வழங்கலாம்.

செம்மை நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள், நாற்றங்கால் பணியை துரிதப்படுத்தவும், இயல்பான நடவு முறையில் சாகுபடி செய்ய உத்தேசித்துள்ள விவசாயிகள் நாற்றங்கால் பணியை விரைவில் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

குறுவை சாகுபடி செய்ய இயலாத விவசாயிகள் உளுந்து மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிா்களை சாகுபடி செய்யலாம். இறவை பயிராக உளுந்து சாகுபடி செய்யும்போது, ஹெக்டோ் ஒன்றுக்கு 700 முதல் 800 கிலோ மகசூல் எடுக்க வாய்ப்புள்ளது.

குறுவை சாகுபடி பரப்பு நிகழாண்டில் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால், விவசாயிகள் குறுவை பயிறுக்கு தேவையான அளவு மட்டுமே வேளாண் துறையின் பரிந்துரையின் அடிப்படையில், ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, வேளாண்மை துறை இணை இயக்குநா் (பொ) ரவிச்சந்திரன், வேளாண்மை துறை துணை இயக்குநா் உத்தராபதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) (பொ) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

SCROLL FOR NEXT